fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ். அரியாலையில் வெற்றுக் காணியில் பெரும் தொகை வெடிபொருட்கள் மீட்பு!

யாழ். அரியாலை சர்வோதயத்திற்கு அருகாக உள்ள வெற்றுக் காணியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(07) பெரும் தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பெரும் தொகை வெடிபொருட்கள் மீட்பு!

மேற்படி பகுதியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக காணியைத் துப்பரவு செய்யும் பணி இன்றைய தினம் நடைபெற்றது.

பெக்கோ இயந்திரம் மூலம் துப்பரவுப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் இரண்டு பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் காணப்படுவதைத் துப்பரவு ப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவதானித்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் வெடிபொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கி ரவைகள் மற்றும் மகசின் உள்ளிட்ட மிதிவெடிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்துக் குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் துப்பரவுப் பணிகளும் இடைநிறுத்தப்படடுள்ளன.

இதேவேளை, குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள் காணப்படாலாமெனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related posts

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் யாழ். பல்கலை மாணவர்களின் மக்கள் எழுச்சிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் அணிதிரள்வு

TamilTwin

Z-Score முறையில் மாற்றத்தை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி

World News

ரணிலை கொழும்பில் சந்தித்தார் கனிமொழி

World News