fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் வரட்சியால் அதிக பாதிப்புக்கள்!

தற்போது நிலவும் வரட்சியுடனான வானிலை காரணமாக இலங்கையில் 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிப்பு

யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் வரட்சியால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பொருட்டுப் பிரதேச செயலாளர் பிரிவுகளூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வரட்சி நிலவும் பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் கிராம உத்தியோகத்தர்களுக்குத் தெரியப்படுத்த முடியும்.

இது தொடர்பில் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பினை ஏற்படுத்தித் தகவல்களை வழங்க முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாவலரை விட இந்துபோர்ட் இராசரத்தினம் சைவத்திற்கும், தமிழுக்கும் ஆற்றிய பணிகள் அதிகம்: சித்தார்த்தன் எம்.பி புகழாரம் (Video)

TamilTwin

சிறைச்சாலைத்துறையின் முக்கிய அறிவிப்பு

SL News

இயல்பு நிலைக்கு திரும்புகின்றது யாழ் மாவட்டம்! மக்களை ஒத்துழைக்க வேண்டுகோள்

World News