வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் உப பீடாதிபதியாக பதவி வகித்து வந்த சுப்பிரமணியம் பரமானந்தம் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பீடாதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் இன்று சனிக்கிழமை (30) உத்தியோகபூர்வமாகத் தனது பணிப் பொறுப்புக்களை ஏற்றுள்ளார்.
இதே வேளை, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதியாக இது வரை காலமும் பதவி வகித்து வந்த சதாசிவம் அமிர்தலிங்கம் இன்றைய தினம் அரச சேவையிலிருந்து இளைப்பாறுகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.