fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Ganesh
இலங்கைச் செய்திகள்

யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் நிரந்தர வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாமையால் கடும் நெருக்கடி

நிரந்தர வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாமையால் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தினர் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். எனவே, மேற்படி நியமனம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் கல்விப் பணிப்பாளர் பதவி வெற்றிடமாகக் காணப்படுவதால் வலயத்திலுள்ளவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் அதிகளவு பாடசாலைகளையும், அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரபலயமான பாடசாலைகளையும் கொண்டது யாழ்ப்பாணக் கல்வி வலயம். இந்த வலயத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக நிரந்தர வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை.

இதனால், யாழ்ப்பாணக் கல்வி வலய அலுவலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியியலாளர்கள் மத்தியில் விரக்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

நல்லூரில் நாளை நாவலர் பெருமானின் நினைவு வைபவம்

TamilTwin

தனியார் பேருந்து போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடல்

World News

வௌ்ளைவான் சந்தேக நபர்களிடம் 5 மணித்தியாலம் வாக்குமூலம்!

World News