fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி: விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

இன அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும்- 16 ஆம் திகதி வடக்கு கிழக்கு உட்பட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் யாழில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி இடம்பெறவுள்ளது.

மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி

யாழ் .பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆரம்பமாகும் குறித்த பேரணி யாழ். முற்றவெளி வரை இடம்பெறவுள்ளது. கால அவகாசம் வேண்டாம், சர்வதேச விசாரணை வேண்டும், பொதுச் சபைக்குப் பாரப்படுத்த வேண்டும் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே பேரணி நடைபெறுகிறது.

இந்த மக்கள் எழுச்சிப் பேரணியில் அனைவரும் ஆதரவை வழங்கி சர்வதேசத்திற்கு ஒட்டு மொத்தத் தமிழ்மக்களின் நிலைப்பாட்டினைத் தெரிவிக்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி மக்கள் எழுச்சிப் பேரணியை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பல்வேறு செயற்பாடுகளிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி

Related posts

யாழ். அளவெட்டியில் நாளை மாபெரும் குருதிக் கொடை முகாம்

TamilTwin

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிக்க ஆளுநரின் முடிவு என்ன?

World News

இன்று முதல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை!

World News