fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » யாழில் புகையிலைச் செய்கை: ஆர்வம் காட்டும் விவசாயிகள்
இலங்கைச் செய்திகள்

யாழில் புகையிலைச் செய்கை: ஆர்வம் காட்டும் விவசாயிகள்

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரும்போக புகையிலைச் செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வந்த நிலையில் புகையிலை அறுவடை இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ளது.

யாழ். வலிகாமம் பிரதேசத்தில் ஏழாலை, குப்பிழான், புன்னாலைக்கட்டுவன், மயிலங்காடு, ஈவினை, வயாவிளான், குரும்பசிட்டி, அச்செழு, புத்தூர், நவக்கிரி, ஊரெழு, உரும்பிராய், கோப்பாய், சுன்னாகம், கந்தரோடை, மருதனார்மடம், இணுவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவகம் மற்றும் வடமராட்சிப் பகுதிகளிலும் பல ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வருடம் புகையிலைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை கடந்த நவம்பர் மாதம் புகையிலைச் செய்கை ஆரம்பித்திருக்கப்பட வேண்டிய போதிலும் சீரற்ற காலநிலை காரணமாக காலதாமதமாகியே ஆரம்பமாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய நாள் உங்களுக்கு எப்படித் தெரியுமா?- {28.02.2020}

TamilTwin

கொழும்பு நகரை வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள்!

SL News

தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டார் தாக்குதல் நடத்திய பொலிசார்!

SL News