fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட யுவதி தலைமறைவு!

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் தனியார் பயண ஒழுங்கமைப்பு நிறுவனமொன்றில் உயர் பதவியில் கடமையாற்றி வந்த யுவதியொருவர் பாரிய நம்பிக்கை நிதி மோசடி செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலையில் குறித்த யுவதி தற்போது தலைமறைவாகி வாள்வெட்டுக் குழுக்களின் பாதுகாப்பில் உள்ளதாகத் தெரியவருகிறது.

Sri Lanka Money Fraud

பெரும் மோசடி நடவடிக்கைகளில் காரணமாக குறித்த யுவதி மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்.குடாநாட்டிலுள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுகளிலும் குறித்த யுவதிக்கெதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்படி யுவதியின் செயற்பாடு காரணமாக யாழ்.குடாநாட்டில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள யுவதியைப் பொலிஸார் தீவிரமாகித் தேடி வருகின்றனர். எனினும், தலைமறைவாகியுள்ள யுவதி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வாள்வெட்டுக் குழுக்களின் பாதுகாப்பிலிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், குறித்த யுவதியை உடனடியாக கைது செய்ய முடியாத நிலை பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட யுவதி வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அதிரடியாக கைது செய்யப்பட்ட 1700 பேர்: பொலிஸார் எடுத்த நடவடிக்கை

World News

கொரோனா சந்தேகம்: நாடளாவிய ரீதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்

World News

நல்லை ஆதீனத்திற்கு பிரதமர் வழங்கியுள்ள வாக்குறுதி!!

TamilTwin