fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியீடு

சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் இலங்கையில் ஜனநாயகத்தின் எதிர்காலமும் எனும் தலைப்பிலான விசேட கலந்துரையாடல் பெளர்ணமி தினமான இன்று புதன்கிழமை (20) பிற்பகல்-03.30 மணி முதல் இல- 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி எனும் முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளர் தோழர் என். பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சேனாதீர குணத்திலக கலந்து கொண்டு பிரதான உரையாற்றினார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ( CTA ) தொடர்பாக முழுமையாக ஆராயும் வகையிலான மேற்படி உரையைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மகேந்திரன், மூத்த சட்டத்தரணி சோ. தேவராஜா, பிரபல ஆவணப்பட இயக்குனர் எஸ்.கேசவராஜா, ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி. முத்துலிங்கம், மூத்த எழுத்தாளர் க. தணிகாசலம், மற்றும் அரசியல், பொருளாதார, சமூக, விஞ்ஞான, கலை, இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாகத் தமது அபிப்பிராயங்களை வெளிப்படுத்தினர். இதன் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வடபிராந்திய செயலாளர் செ. கதிர்காமநாதன் , சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ச. தனுஜன், மூத்த எழுத்தாளர் கே.எஸ்.சிவஞானராஜா, அரசியல், பொருளாதார, சமூக, விஞ்ஞான, கலை, இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

Related posts

அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற ஒரு முட்டாள் இனவாதி விமல் வீரவன்ச

World News

அரசாங்க ஊடக பேச்சாளர்கள் நியமனம்

World News

இலங்கையின் எல்லைப் பகுதி பலவீனமாக காணப்படுகின்றது- அமெரிக்கா எச்சரிக்கை

World News