fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழில் கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியருக்கு ஏற்பட்ட கதி!

யாழ். உசன் இராமநாதன் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியருக்குத் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(15) பிற்பகல் நடந்துள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாடசாலையில் கலவி கற்பித்துக் கொண்டிருந்த குறித்த ஆசிரியருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவர் உடனடியாக மிருசுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் அவரே முன்னரே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொடிகாமம் பொலிஸார் மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மிருசுவில் உசன் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து சிவகுமார் (வயது-49) என்பவரே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

{எஸ். ரவி}

Related posts

யாழில் மூடப்படும் நிலையில் பல ஆரம்பப் பாடசாலைகள்: முன்னாள் அரசாங்க அதிபர் வேதநாயகன் பெரும் கவலை (Video)

TamilTwin

இங்கிலாந்தில் சிக்கியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

World News

கொரோனாவை கட்டுபடுத்தும் மத்திய நிலையத்தின் பிரதானியாக சவேந்திர சில்வா

World News