fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை!

யாழ். வடமராட்சிப் பகுதியில் இளம் குடும்பஸ்தரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(15) பிற்பகல் பருத்தித்துறை வியாபாரி மூலைப் பகுதியில் நடந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேபகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் நடேசலிங்கம்(வயது-39) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.

இதேவேளை, மேற்படி சம்பவத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

{செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி}

Related posts

யாழ். மாநகர சபை சுகாதாரத் துறையில் அரசியல் தலையீடு ..!!

TamilTwin

அமெரிக்காவில் நேற்று மட்டும் 22 ஆயிரத்து 105 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

World News

பொதுத் தேர்தலின் பின் மஹிந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவுள்ள கூட்டமைப்பு!!

TamilTwin