fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
ஆசிரியர்கள் - Teachers Protest in Jaffna
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியுடன் கவனயீர்ப்புப் போராட்டம்

ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பளத்தை உயர்த்துதல், ஆசிரியர்கள் மீது செலுத்தப்படும் தேவையற்ற நெருக்கீடுகளை அகற்றுதல், மொத்தத் தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6% ஒதுக்குதல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம்(13) நாடு முழுவதும் அதிபர்கள், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

குறித்த போராட்டத்துக்கான அழைப்பினை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மற்றும் தரம் -iii புதிய அதிபர் சங்கம் ஆகியன கூட்டிணைந்து விடுத்திருந்தது.

மேற்படி சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் தத்தமது பாடசாலைகளுக்கு முன்பாக இன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்து கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு முன்பாக இன்று காலை-08 மணியளவில் ஒன்று கூடிய ஆசிரியர்கள் கறுப்புப் பட்டிகள் அணிந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “அதிகரி அதிகரி சம்பளத்தை அதிகரி”, “நீக்கு நீக்கு மேலதிக வேலைப் பளுவை நீக்கு”, ” ஒதுக்கு ஒதுக்கு கல்விக்கு 6% ஒதுக்கு” உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணித்தியாலம் வரை இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியுடன் தமது கடமைக்குத் திரும்பினர். யாழ். மாவட்டத்திலுள்ள ஏனைய பாடசாலை ஆசிரியர்களும் கறுப்புப் பட்டி அணிந்து தத்தமது கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, குறைந்த வேதனங்களோடு பணியாற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் தமது வேதனங்கள் அதிகரிக்கப்படவேண்டுமெனவும், அவசியமற்ற சுமைகள் நீக்கப்படவேண்டும் எனவும், மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை எனவும் பல போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தப் பயனும் இல்லை. இந்த நிலையில் தான் அதிபர்கள், ஆசிரியர்கள் இன்றைய தினம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Teachers Protest in Jaffna
Teachers Protest in Jaffna
Teachers Protest in Jaffna
Teachers Protest in Jaffna
Teachers Protest in Jaffna

Related posts

விடுவிக்கப்படாத மக்களின் காணிகளை விடுவிக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

World News

புதிய அரசியலமைப்பிற்கான பொதுமக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பு

SL News

ரஸ்யாவின் கொரோனா மருந்தினை இலங்கைக்கு கொண்டுவர முயற்சி!

SL News