fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய காலம் பொற்காலம்: மனம் திறந்தார் வேதநாயகன் (Video, Photo)

நான் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அரசாங்க அதிபராகக் கடமையாற்றியிருக்கின்றேன். யாழ். மாவட்டத்தில் நான்கு வருடங்களும், 11 மாதமும் நான் அரசாங்க அதிபராக கடமையாற்றியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை நான் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய காலம் ஓர் பொற்காலம். இந்தக் காலத்தில் எனக்கு எந்தவிதமான அழுத்தங்களோ அல்லது அரசியல் தலையீடுகளோ காணப்படவில்லை என ஓய்வுநிலை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அளவெட்டி மகாஜன சபையின் புதிய கட்டடத் திறப்பு விழா கடந்த சனிக்கிழமை(12) இடம்பெற்ற போது பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த அபிவிருத்திக்கும் நிதியை எடுக்கக் கூடியதாகவும், எவ்வளவு நிதியையும் எடுக்கக் கூடியதாகவுமிருந்தது. ஆனால், நிதியை எவ்வாறு செலவழிப்பது தான் எங்களுக்கு கடினமானதாகவிருந்தது. மாகாண சபைகளின் திணைக்களங்கள் எங்களுக்குப் போதிய ஒத்துழைப்பாகச் செயற்பட்டன. இந்தத் திணைக்களங்களில் கடைமையாற்றியவர்கள் ஆளுமையுள்ளவர்களாக விளங்கினார்கள்.

யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை பிரதேச செயலாளர்கள் ஊடாகத் தான் பெருமளவு நிதிகளை நாங்கள் அபிவிருத்திக்குச் செலவழித்தோம். கடந்த- 2019 ஆம் ஆண்டு சுமார் பத்தாயிரம் மில்லியன் பணத்தை எங்களால் பெறக் கூடியதாகவிருந்து.

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உதவி அரசாங்க அதிபராகவோ, பிரதேச செயலராகவோ, பதில் கடமையாகவோ நான் கடமையாற்றியிருக்கின்றேன். இதனால், யாழ். மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமையாற்றுவது எனக்கு எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ. ரவிசாந்}

Related posts

யாழில் இன்றும் 44 பேருக்கு கொரோனாத் தொற்றுப் பரிசோதனை: வெளியாகியுள்ள முடிவு!

TamilTwin

யாழ்.நவாலியில் வீடு புகுந்து வாள்வெட்டு: பாடசாலை மாணவன் படுகாயம்!!

TamilTwin

இந்திய அரசியல்: வைரலாகும் சுந்தர் பிச்சையின் கருத்து

World News