மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமையும்(03), நாளை வியாழக்கிழமையும்(04) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று (03) காலை- 08.30 மணி முதல் பிற்பகல் -05 மணி வரை யாழ். வீமன்காமம் வறுத்தலை விளான் ஆகிய பகுதிகளிலும், நாளை(04) காலை-08.30 மணி முதல் பிற்பகல் -05.30 மணி வரை யாழ். வளலாய், அக்கரை அண்ணா சிலையடி, மண்டான் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.