பெண்கள் அனைவருக்குமே அழகாக தோன்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒரு சிலர் இயற்கையிலேயே அழகாக தோற்றம் அளிப்பர். ஒரு சிலருக்கு அழகு சாதனம் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இருக்கும். அவர்கள் தங்களுடைய மேக்கப் அதிக நேரம் முகத்தில் நிலைத்து இருப்பதற்கு சில வழிகளை இங்கு காணலாம்.
முதலில் உங்கள் முகத்தினை வெதுவெதுப்பான நீரில் கழுவிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள தூசிகள், அழுக்குகள் போன்றவை நீங்கிவிடும். முகம் உலர்ந்த பிறகு மேக்கப் போட்டால் நிச்சயம் நீண்ட நேரம் மேக்கப் அழியாமல் இருக்கும்.

முகத்தில் பவுண்டேஷனை அப்ளே செய்வதற்கு முன்னால் உங்கள் முகத்தில் உள்ள தழும்புகள், நிறத்திட்டுகள் போன்றவற்றை கண்சீலர் கொண்டு மறைக்க வேண்டும். அப்பொழுது தான் மேக்கப் முழுமை பெறும். முகத்தில் உள்ள துளைகளை மூடுவதற்கு சிலிக்கான் வகையான பவுண்டேஷனை பயன்படுத்துங்கள் அவை தான் சிறந்ததாக செயல்படக் கூடும்.
பவுடர் பயன்படுத்தும் பொழுது கையினால் பயன்படுத்தாமல், பிரஷ் கொண்டு பயன்படுத்த வேண்டும். வாட்டர் ப்ரூவ் கொண்ட மஸ்காரா, ஐ லைனர் பயன்படுத்தும் பொழுது அவை நீண்ட நேரம் நீடித்து இருக்கும்.