fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

மூத்த கவிஞர் பத்மநாதனுக்கு ‘யாழ். விருது’ வழங்கிக் கெளரவம்: குவிந்த பாராட்டுக்கள்!(Video, Photos)

நல்லைக் குமரன் மலர்-28 இன் வெளியீட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை(31) காலை-09 மணி முதல் யாழ்ப்பாணம்  நாவலர் கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

சைவசமய விவகாரக் குழுவின் தலைவரும், யாழ்.மாநகர சபையின் ஆணையாளருமான இ. த. ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற விழாவில்  பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஓய்வுநிலை அதிபரும், சைவ வித்தியா விருத்திச் சங்கத் தலைவரும், சிறந்த மொழிபெயர்ப்பாளரும், ஈழத்தின் மூத்த கவிஞருமான சோ.பத்மநாதன் இந்த ஆண்டுக்கான யாழ். மாநகரசபையின் அதி உயர் விருதான ‘யாழ். விருது’ வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

யாழ். மாநகரசபையின் பதில் முதல்வர் மலர்மாலை அணிவித்துக் கெளரவித்தார். யாழ். மாநகர ஆணையாளர் பொன்னாடை போர்த்தியும், பொற்கிழி வழங்கியும் கெளரவித்தார்.  

நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் ‘யாழ். விருதினை’ சம்பிரதாயபூர்வமாக வழங்கிக் கெளரவித்தார்.

அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் இந்துநாகரீகத் துறைத் தலைவர் மா.வேதநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆங்கிலத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி- கந்தையா ஸ்ரீகணேசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி எஸ். முகுந்தன்,     யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறை விரிவுரையாளர் தி. செல்வமனோகரன், தற்போது விடுமுறையிலுள்ள யாழ். மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் உள்ளிட்டோர் யாழ்.விருதினைப் பெற்றுக் கொண்ட கவிஞர் சோ. பத்மநாதனுக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தனர். 

அத்துடன் விழாவில் கலந்து கொண்டு ஆசியுரைகள் ஆற்றிய நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், தலைமையுரையாற்றிய யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் இ. த. ஜெயசீலன், விருந்தினர்களாக கலந்து கொண்ட யாழ்.மாநகரசபையின் பதில் முதல்வர் து. ஈசன்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ். சிவலிங்கராசா,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறை விரிவுரையாளர் இ. சர்வேஸ்வரா உள்ளிட்ட அனைவரும் கவிஞர் சோ.பத்மநாதனின்  பல்துறை ஆளுமைகளையும், சேவைகளையும் மெச்சிப் பாராட்டினர்.  

இதேவேளை, யாழ். மண்ணின் சிறந்த கல்வியலாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வாழ்நாட் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை கடந்த- 2019 ஆம் ஆண்டில்   யாழ்.விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருந்ததுடன் 2018 ஆம் ஆண்டில் தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகி செ. மோகனதாஸிற்கும், 2017 ஆம் ஆண்டு தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனுக்கும்
“யாழ். விருது” வழங்கப்பட்டிருந்தது.
 
யாழ். மாநகர சபையின் சைவசமய விவகாரக் குழுவால் வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் “யாழ். விருது”  முக்கியமானதொரு விருதாக விளங்குகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி, படங்கள்:- செ. ரவிசாந்}      

Related posts

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை: யாழ்.போதனா வைத்தியசாலை பொதுவைத்திய நிபுணர் ஆதங்கம்!

TamilTwin

சீன ஜனாதிபதி வருகை: சுற்றுலாப் பயணிகள் அவதி: உள்ளூர் கடைக்காரர்கள் பாதிப்பு! பளபளக்கும் மாமல்லபுரம்

World News

தனிமைப்படுத்தலில் 4,126 பேர் தொடர்ந்தும் உள்ளனர் – இராணுவம்

World News