fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

முருங்கைக்கீரை புற்றுநோய்க்கு எதிரியா

முருங்கைக்கீரை ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது.  இது எளிதாக கிடைக்கக் கூடிய கீரை ஆகும்.  முருங்கை மரத்தின் கீரைகள் மட்டும் இன்றி அதில் இருந்து கிடைக்கக் கூடிய பூ, காய், பட்டை போன்றவையும் மருத்துவக் குணம் கொண்டதாக காணப்படுகிறது.

முருங்கைக்கீரை அதிக அளவு ஊட்டச்சத்து கொண்டது.  முருங்கை மரம் நம் ஊரில் பரவலாக காணப்படக் கூடிய ஒரு மரமாகும்.

முருங்கைக்கீரை புற்றுநோய்க்கு எதிரியா

முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து என பல சத்துக்கள் காணப்படுகிறது.  மேலும் இதில் மிகக் குறைந்த அளவே கொழுப்புச் சத்து உள்ளது.  இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க முருங்கைக் கீரை அதிக உதவி புரிகிறது.

புற்றுநோய்க் கிருமிகள் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு உண்டு.  குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க முருங்கைப் பூவினை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் சேர்த்து கொடுத்து வரலாம்.

Related posts

ஆயுத பூஜையின் ஸ்பெஷல் கொண்டைக்கடலை சுண்டல்!!

TT Media

குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் இனிப்பு தக்காளிப் பச்சடி!!

TT Media

டேஸ்ட்டியான கேரட் மில்க் ஷேக்!!

N N