fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

முதல்முறையாக பாராளுமன்றம் செல்கிறார் நீதியரசர் விக்னேஸ்வரன்!

நடந்து முடிந்த 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ்மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் 21, 554 வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்றம் செல்கின்றார்.

கடந்த-2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்-23 ஆம் திகதி இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கில் போட்டியிட்டு 1,32,255 விருப்பு வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்ற விக்னேஸ்வரன் முதலாவது வடமாகாண சபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் 2018 ஒக்ரோபர் மாதம் வடமாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் கூட்டமைப்பின் தலைமையின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்த விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்.

புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ‘தமிழ்மக்கள் தேசியக் கூட்டணி’ எனும் பெயரில் ஈபிஆர்எல்எவ், அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கட்சி மற்றும் ஈழமக்கள் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி கூட்டணி அமைத்து இம்முறை பாராளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொண்டனர்.

இந்நிலையில் வெளியான 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகளுக்கமைய யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சித் தொகுதிகளை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் 21, 554 விருப்பு வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றிய நிலையில் பாராளுமன்றம் செல்கின்றார்.

இதேவேளை, கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் பாராளுமன்றம் சென்ற பிரதிநிதிகள் தமிழ்மக்களின் குரலாகப் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கத் தவறிய நிலையில் முதல்முறையாகப் பாராளுமன்றம் செல்லும் சி. வி. விக்னேஸ்வரன் தொடர்பாகத் தமிழ்மக்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்புக்கள் உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

{செய்தித் தொகுப்பு:- செ. ரவிசாந்}

Related posts

யாழ்ப்பாணத்தில் குணமடைந்து வீடு சென்றோருக்கு இப்போதும் தொற்றுள்ளது!

World News

பாடசாலைகளில் நிலவும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய ஜனாதிபதி நடவடிக்கை!

World News

கோட்டாபய ராஜபக்சவால் தமிழ்மக்களுக்குப் பொருத்தமான தீர்வை வழங்கவே முடியாது: எதிர்வு கூறுகிறார் பிரபல அரசியல் ஆய்வாளர்!! (Video)

TamilTwin