fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

முடி கொட்டுகிறதா? இதோ செலவில்லாமல் தீர்வு

இங்கே 2 எளிய மற்றும் பயனுள்ள முடி இழப்பை தடுக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பொருட்கள்

உங்கள் வீட்டின் சமையலறையிலேயே கிடைக்கும்!

1. வெங்காயச் சாறு :

முடி கொட்டுகிறதா? இதோ செலவில்லாமல் தீர்வு

முடி கொட்டுவதை வெகு சீக்கிரத்தில் கட்டுப்படுத்துவதாக கருதப்படும், மிகவும் சிறந்த மற்றும் பழமையான தீர்வு வெங்காயச் சாறு பயன்படுத்தும் முறை தான்.

இதற்கு காரணம் வெங்காயத்தில் கந்தகம் உள்ளது, கந்தகம்தான் திசுக்களில் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க செய்து முடி கொட்டுவதை கட்டுப்படுத்தி மிக அதிவேகத்தில் முடியை வளரச்செய்வது. ஆனால் வெங்காய சாற்றின்  வாசனையால் நாம் பயன்படுத்த தயங்கக்கூடாது. ஒரு முறை குளித்தபின் வாசனை போய்விடும்.

உங்கள் முடிக்கு வெங்காயம் சாறு எப்படி பயன்படுத்துவது?

வெங்காயத்தை சில துண்டுகளாக வெட்டி அரைக்கவும், அதன் சாற்றை 10-15 நிமிடங்கள் உங்கள் உச்சந்தலையில் மண்டை ஒட்டின் மேல் படுமாறு மசாஜ் செய்யவேண்டும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து லேசான ஷாம்பூவுடன் தலையை அலசவேண்டும்.

குறிப்பு: நீங்கள் வெங்காயச்சாறுக்கு மாற்றாக உருளைக்கிழங்கு சாறும் பயன்படுத்தலாம்.

2. இயற்கை முடி வளர்ச்சிக்கு தேங்காய் பால்

முடி கொட்டுகிறதா? இதோ செலவில்லாமல் தீர்வு

ஒரு தேங்காயிலிருந்து இருந்து தேங்காய் பால் எடுத்து கொள்ளவேண்டும் (தேங்காய் பால் கடைகளில் வாங்கி பயன்படுத்தக்கூடாது. இதனுடன் எலுமிச்சை அரை தேக்கரண்டி, விளக்கெண்ணெய் 4 சொட்டு சேர்த்துகொள்ளவேண்டும். நன்கு கலந்து அதை தலையில் தேய்க்க வேண்டும், அதை 4-5 மணி நேரம் விட்டுவிட்டு பின் அதை அலசினால் முடி மிக மிருதுவாக இருப்பதுடன் முடி அசுர வேகத்தில் வளரும்.

Related posts

அழகான வெள்ளையான முகம் பெற இதைக் குடிங்க!!

N N

பியூட்டி பார்லருக்கு நோ… கண் கருவளையம் காணாமல் போய்விடும்…

N N

பாதம் பளிங்குபோல் மின்ன இந்த பேக்கினைப் போடுங்க!!

N N