fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

முடியை இப்படியும் பராமரிக்கலாமா?

முடியை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி நாம் தெளிவாக பார்க்கலாம்.

1: உங்கள் முடி வகையை கண்டறியவேண்டும்:

 மூன்று வகை முடிகள் உள்ளன:

 நன்கு அடர்தியானவை, நடுத்தரமானது மற்றும் மெல்லிசானது.

உங்கள் முடி எந்த வகையானது என தெரிந்து கொள்ள, உங்கள் தலைமுடியை ஒரு போனிடைல் சடை (குதிரை வால்) போடலாம்.

நீங்கள் தலை பேண்டை வைத்து ஒரு சுற்றிலேயே போனிடைல் சடை போட போட்டு விட்டால், உங்களுக்கு அடர்தியானமுடி இருக்கிறது. நீங்கள் பேண்டை இரண்டு அல்லது மூன்று முறை மடித்தீர்கள் எனில் நடுத்தரமான அளவில் அடர்தியானமுடி உள்ளது. பேண்டை அதிகமாக சுற்றவேண்டி இருந்தால், உங்கள் முடி வகை மெல்லியதாக இருக்கும்.

முடி அமைப்பானது சுருள் முடி , மற்றும் நேரான முடி என்ற இரண்டு வகையாக உள்ளது. உங்களுக்கு முடி பற்றி இன்னும் சந்தேகம் இருந்தால்

உங்கள் சிகையலங்கார நிபுணரிடம் பேசுங்கள். உங்களின்  வகையை தெரிந்த பிறகு, அதற்கு ஏற்ப சிகையலங்கார தயாரிப்புப் பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதால் முடியின் அழகை சிறப்பாக பராமரிக்க முடியும்.

முடியை இப்படியும் பராமரிக்கலாமா?


2: முடிவெட்டுதலின் முறை (ஹேர்கட்) மற்றும் பாணி (ஸ்டைல்)

ஹேர்கட் மற்றும் ஹேர்ஸ்டைல் உங்களின் முடி வகை மற்றும் முகத்திற்கு ஏற்ப இருக்கவேண்டும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஹேர்ஸ்டைல் யை தேர்வு செய்தபின்,

ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை முடிவெட்டுதலை  திட்டமிடவேண்டும்.

குறிப்பு :

      சிகையலங்கார தயாரிப்பு பொருட்களை முடிந்த அளவு வெளியே வாங்காமல் வீட்டிலேயே தயாரிப்பது நல்லது.

முடியை எவ்வாறு பராமரிப்பது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன். முயற்சித்துதான் பாருங்களேன்…

Related posts

வசீகரமான முக அழகு வேண்டுமா? இதோ ஆறு டிப்ஸ்

N N

தலைமுடியை அடர்த்தியாக்கும் இயற்கை சீயக்காய் பொடி!!

N N

தோல் மென்மையாக பாலாடைக்கட்டி க்ரீம்!!

N N