fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

முக அழகினைக் கூட்டும் புதினா ஃபேஸ்பேக்!!

புதினா இலைகளானது உதட்டினை சிவப்பாக்கும் என்பது நாம் அறிந்த விஷயமாகும், ஆனால் இந்த புதினாவானது முகத்தின் அழகினைக் கூட்டும் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. தற்போது அதுகுறித்த விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

முக அழகினைக் கூட்டும் புதினா ஃபேஸ்பேக்!!

தேவையானவை:

புதினா இலைகள்- 15

வெள்ளரித் துண்டு- ½

வைட்டமின் ஈ கேப்ஷியூல்- 1

செய்முறை:

  1. புதினா இலைகளை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. அடுத்து வெள்ளரித் துண்டினை தோல்நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. அடுத்து புதினா இலைகள் மற்றும் வெள்ளரித் துண்டினை தண்ணீர்விட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  4. இறுதியில் அவற்றுடன் வைட்டமின் ஈ காப்சியூல் கலந்து கொள்ளவும்.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவிடவும், அதன்பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தினைக் கழுவினால் முக அழகானது கூடும்.

Related posts

அறுவை சிகிச்சை தடயங்கள் நீங்க!!

N N

சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் பப்பாளி

N N

மென்மையான பாதங்களுக்கு வீட்டிலேயே பேக் செய்யலாம் வாங்க!

N N