fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

முகநூலால் அறிமுகமான காதலியின் மோசமான வேலை: யாழ். இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை!

முகநூல்(பேஸ்புக்) மூலம் அறிமுகமாகி காதலித்த பெண்ணிடம் ஜேர்மனி நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் சுமார்- 55 இலட்சம் ரூபா பெறுமதியான நகை, பணம் என்பவற்றைப் பறிகொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ். கோப்பாயில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

facebook-love

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

குறித்த பெண் தான் வவுனியாவில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்து முகநூல் ஊடாக ஜேர்மனியில் வாழ்ந்து வரும் இளைஞரொருவருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். முகநூல் அறிமுகம் நாளடைவில் காதலாக மாறியது. 

இந்நிலையில் ஜேர்மனியிலிருந்து யாழ்ப்பாணம் வந்த காதலனின் அழைப்பின் பேரில் மேற்படி பெண் கோப்பாயிலுள்ள அவரது வீட்டில் தங்கியிருந்து அவருடன் உறவாடியுள்ளார். இவ்வாறு தங்கியிருந்து சுமார்- 14 நாட்களின் பின்னர் குறித்த பெண் தனது காதலனின் வீட்டிலிருந்த சுமார்- 55 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகள், பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளாள். 
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞன் நேற்று யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

Related posts

றம்புட்டானால் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்!

World News

கொழும்பில் இன்று முதல் புதுப்பிக்கப்பட்ட வீதி சமிக்ஞைகள்

SL News

பதவியைத் தந்து வாயை மூட முயன்றார் மைத்திரி: பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!!

TamilTwin