தற்போது திரையில் வெளிவந்து மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தல அஜித் படம் விஸ்வாசம். விஸ்வாசத்தின் பட இயக்குனர் சிவா. சிவா தொடர்ந்து தலயை வைத்து நான்கு படங்கள் இயக்கிவிட்டார், நான்கு படங்கள் தொடர்ச்சியாக ஒரே நடிகரை இயக்கியவர் என்ற பெருமை இவரையே சாரும். இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.நதல 59 ஒரு ரீமேக் படம் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை போனிக்கபூர் தயாரிக்கிறார் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடிக்கிறார். தல 59 படம் அஜித் பிறந்தநாளான மே 1 ரிலீஸ் ஆகலாம் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள். படப்பிடிப்புகள் நடந்து வருகின்ற இந்நிலையில் தல 60 பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது படக்குழு. தல 60 “ஹேப்டா – தி லாஸ்ட் லெக்சர்” என்ற படத்தின் ரீமேக் படம் மேலும் அதனை சிவா இயக்கப்போகிறார் என்ற தகவலும் வந்துள்ளது.

இதனை வினோத் இயக்கப்போவதாக இருந்தது. ஆனால் மீண்டும் தல 61 இன் கதை மெருகேற்றும் பணி இருப்பதால் சிவா இயக்கப்போவதாக உறுதியாகிவிட்டது.
வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் சிவா கூட்டணியில் மீண்டும் தல 60 க்கிற்கு அஜித் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் இது சிலருக்கு வருத்ததையும் ஏற்படுத்தியுள்ளது.