fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பூரண ஆதரவு

யாழ். பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்படும் மாபெரும் எழுச்சிப் பேரணி: வடக்கின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் போக்குவரத்து ஏற்பாடுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இன அழிப்பிற்கு நீதி கோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி நாளை சனிக்கிழமை(16 ) யாழ் பல்கலைக்கழக முன்றலிலிருந்து யாழ். மாநகர சபை மைதானம் (சுப்பிரமணியம் பூங்கா முன்பாக) நோக்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில் குறித்த பேரணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் தமது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளது.

இந்தப் பேரணியில் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தமிழ்மக்களையும் அணிதிரண்டு பங்கேற்குமாறும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விளக்கங்களும், விபரங்களும் பல்கலைக்கழக மாணவர்களாலும், பல்கலைக்கழகச் சமூகத்தினராலும் ஊடகங்களுடாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Jaffna university employees union

Related posts

சாவகச்சேரியில் ஆறு இளைஞர்கள் கைது

SL News

ஜனாதிபதி வேட்பாளர் ரணிலா?: வெளியானது மறுப்பு!!

TamilTwin

பயத்தில் தவறான முடிவெடுத்த மாணவி! யாழில் விபரீதம்!

SL News