பெண்கள் மாதவிடாய் நாட்களில் உடம்பு வலி, வயிற்று வலி என அவதியுறுகின்றனர். மாதவிடாய் நாட்களில் வீட்டு வேலை செய்து, அலுவலகங்களுக்கும் சென்று வருகின்றனர்.
ஓய்வு எடுக்க முடியாமல் கஷ்டப்படும் பெண்களுக்கு உதவும் வகையில் கேரளாவின் பிரபல பல்கலைக் கழகம் சிறப்பான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையானது கேரளாவில் உள்ள கொச்சின் பல்கலைக் கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இயங்கிவரும் பல்கலைக் கழகம்தான் கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம்.
இந்தப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு செமஸ்டரின் வேலை நாட்களில் 2 சதவீதம் மாதவிடாய் விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
பெண்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த விடுமுறை குறித்த அறிவிப்பானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.