fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாவற்குழி திருவாசக அரண்மனையில் விசேட ஏற்பாடுகள்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நாவற்குழியில் அமைந்துள்ள சிவபூமி திருவாசக அரண்மனையில் மஹா சிவராத்திரி விழா பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளதாக  சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

எதிர்வரும்-04 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-06 மணி முதல் மறுநாள்-05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை திருவாசக அரண்மனையில் அமைந்துள்ள 108 சிவலிங்கங்களுக்கும் பக்தர்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் மேற்கொள்ள முடியும்.

வழமையாக வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் இங்குள்ள 108 சிவலிங்கங்களுக்கும் பக்தர்கள் தங்களுடைய கரங்களால் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்வது வழக்கம். முதன்முதலாக இவ்வருடம் இடம்பெறுகின்ற சிவராத்திரி தினத்தன்று காலை-06 மணி முதல் மறுநாள் காலை-06 மணி வரை பக்தர்கள் பெருந்தொகையாக வருகை தருவார்களென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி தினத்தன்று பகல், இரவு பாராது திருவாசக அரண்மனையில் மணிவாசகர் அருளிய திருவாசக பாராயணம் அடியவர்களால் நிகழ்த்தப்படும். அத்துடன் நான்கு சாமப் பூசைகளும் சிறப்பாக இடம்பெறும்.

எனவே, மஹா சிவராத்திரியில் கலந்து கொள்ளும் பக்தர்களின் நன்மை கருதி விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நாவற்குழி திருவாசக அரண்மைனையில் தெற்கு நோக்கியதாக தெட்சணாமூர்த்தியும், 108 சிவலிங்கங்களும் எழுந்தருளியுள்ளன. இந்தத் திருக் கோயிலில் மணிவாசகர் அருளிய திருவாசகம் முழுவதும் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் வருகை தந்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

Related posts

கொழும்பில் நாளை 15 மணித்தியால நீர்வெட்டு!

TamilTwin

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியில் இலங்கை பின்வாங்கியுள்ளது- ஐரோப்பிய ஒன்றியம்

World News

விக்னேஸ்வரன் தலை­மையில் மாற்று அணி: வட- கிழக்கில் கலந்துரையாடல்களில் குதித்தது புத்­தி­ஜீ­விகள் தரப்பு!!

TamilTwin