தமிழகத்தின் தலைசிறந்த கோயில்கள் பட்டியலில் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு முதன்மை இடம் உண்டு. தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வருகிறவெளிநாட்டவர் யாரும், கபாலீஸ்வரர் கோயிலைத் தவறவிடுவதில்லை. திராவிடக்கலை மற்றும் கட்டடக் கலையின் பெருமைக்குமிகச் சிறந்த உதாரணம், இந்தக் கோயில்.
சிவபெருமானும் சக்தியும் எழுந்தருளியுள்ள இந்தக் கோயிலுக்கு ஏகப்பட்ட சிறப்புகள் உண்டு. பெண் தெய்வமான சக்தி, மயில் உருவத்தில், சிவபெருமானை வணங்கியதால், இந்தக் கோயிலுக்கு இப்படியொரு பெயர் வந்ததாக புராணங்கள் சொல்கின்றன. விண்ணை முட்டும் 37 மீட்டர் உயர கோபுரம், இக்கோயிலின் பிரதான சிறப்பம்சம்.
கோயிலின் மூலவராக வீற்றிருப்பவர் கபாலீஸ்வரர் என்கிற சிவபெருமான். இங்கே கற்பகாம்பாள் என்கிற பெயரில்வீற்றிருக்கிறாள் சிவனின் மனைவி பார்வதி. கற்பகாம்பாள் என்றால் வேண்டியதை எல்லாம் வரமாகத் தந்தருளும் கடவுள் என்றும் ஒரு நம்பிக்கை. சிவபெருமான், ஒரு முறை படைப்புக் கடவுள் பிரம்மாவிடம், மூன்று லோகங்களின் படைப்பு பற்றி சொல்லிக் கொண்டிருந்ததாகவும், பிரம்மா அதற்கு உடன்படவில்லை என்றும், கோபமடைந்த சிவன், பிரம்மாவின் நான்கு தலைகளில் ஒன்றைப் பிடுங்கியதாகவும் புராணம் சொல்கிறது. பிறகு பிரம்மா, சிவனிடம் மன்னிப்பு கோரியதாகவும், அதன் தொடர்ச்சியாகவே சிவபெருமானுக்கு கபாலீஸ்வரர் (கபாலம் என்றால் மண்டைஓடு என்பது தெரிந்ததே) என்கிற பெயர் வந்ததாகவும், அவரது கழுத்தை அலங்கரிக்கும் மண்டையோட்டுடன் கூடிய நெக்லஸுக்கும் அதுவே காரணம் என்றும் புராணங்கள் சொல்கின்றன.
கயிலாய மலையில் நடந்த சந்திப்பில், சிவபெருமானுக்கு உண்டான மரியாதையைக் கொடுக்க பிரம்மா தவறியதால், ஆத்திரம டைந்த சிவன், பிரம்மாவின் தலையைப் பிடுங்கி எறிந்ததாகவும், அதையடுத்து பிரம்மா மன்னிப்பு கேட்டதோடு மட்டுமின்றி, சிவனை மகிழ்விக்க, அங்கேயே ஒரு லிங்கத்தின் சிலையைஅமைத்ததாகவும் கூட கதைகள் உண்டு.
இந்த ஆலயத்தின் வரலாறு இன்னமும் விவாதத்துக்குரியதாகவே இருக்கிறது. பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில், 7வது நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் என்பது பொதுவான கருத்து. ஆலயத்தில் காணப்படுகிற நாயன்மார்களின் புகழுரைகளில் இருந்து இது தெரிய வருகிறது. ஆலயத்தின் கட்டடக் கலைக்கு 300-400வயது இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அதே சமயம், இப்போது சாந்தோம் தேவாலயம் உள்ள இடத்தில்தான் முதலில் இந்தக் கோயில் கட்டப்பட்டது என்றும், அது போர்ச்சுகீசியரால் அழிக்கப்பட்ட பிறகு, கடற்கரையில் இருந்து 1.5 கிலோமீட்டர் தள்ளி , இப்போதுள்ள ஆலயம் அமைக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். நிஜமான கோயில், கடலுக்குள் கட்டப்பட்டிருந்தது என்றும், காலப்போக்கில் கடல் உள் வாங்கியதன் விளைவால், அது மாறிப் போனது என்றும் நம்புகிறது ஒரு கூட்டம். போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்ட இந்த ஆலயத்தை, விஜயநகரப் பேரரசர்கள் , 16ம் நூற்றாண்டில் திரும்பக் கட்டியிருக்கிறார்கள். இரண்டு வாசல்கள் கொண்ட இந்த ஆலயத்தில், இரு பக்கங்களிலும் கோபுரங்கள்உண்டு. கிழக்கு கோபுரம் 40 மீட்டர் உயரம் கொண்டது. மேற்கில் உள்ள சிறிய கோபுரம், புனித குளத்தை நோக்கி அமைந்திருக்கிறது.
சிவபெருமானையும், கற்பகாம்பாளையும் வேறு வேறு வாகனங்களில் (எருது, யானை, மயில், ஆடு, கிளி உள்ளிட்ட பல… தங்கத் தேர் வாகனமும் சமீபத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது) அமரச்செய்து, மேளதாளம் முழங்க, ஆலயத்தைச் சுற்றி வலம்வரச்செய்வது , விசேஷ நாட்களில் இங்கே நடக்கிற சம்பிரதாயம். பக்தர்கள் புடை சூழ, வாகனத்தில் அமர வைக்கப் பட்டுள்ள கடவுள்களைத் தூக்கிச் செல்வதை, புனிதமான ஒரு செயலாக நினைத்துச் செய்வதுண்டு.
வெள்ளிக்கிழமைகளில் கற்பகாம்பாள் தாய்க்கு காசு மாலை அணிவிக்கப்படும். இது குறிப்பிட்ட சில பக்தர் குழுவினரின் காணிக்கை. இந்த அலங்காரத்தைப் பார்க்க பக் தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த நேரத்தில் கற்பகாம்பாள் புகழ் பாடுகிற பக்திப்பாடல்கள் ஒலிக்கும். ஆலயத்தினுள் ஒரு சிறிய மயில் உருவமும் மயில் கூண்டும் இருப்பதைக் காணலாம். கற்பகாம்பாள் , மயில் உருவத்தில்வந்து, கடவுளை வணங்கியவர்என்பதை நினைவுகூரவே இது.
நவராத்திரி நாட்களில் பூம்பாவை,திருஞான சம்பந்தர் ஆகியோரின்உருவச் சிலைகளும், வரலாறும்பார்வை க் கு வை க் க ப் பட்டு ,கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறும்.கோடைக்காலத்தில் , நடுவேமண்டபத்துடன் கூடிய ஒரு சிறியதண்ணீர் தொட்டி, மலர்களால்அலங்கரிக்கப்பட்டு, ஆலயத்தினுள் வைக்கப்பட்டிருக்கும்.
தினசரி நான்கு வேளை பூஜைகள் நடக்கின்றன. அதிகாலை வேளையில்ஒன்று, முற்பகலில் ஒன்று, பிரதோஷகால பூஜை ஒன்று, ராத்திரியில் ஒன்று.
பங்குனி மாததில் அறுபத்தி மூவர்திருவிழா இங்கே மிகவும் பிரபலம்.இந்த ஏரியாவே திருவிழா களைகட்டும். அதே மாதம் நடைபெறுகிற பங்குனிப் பெருவிழாவும் மிகப் பிரசித்தி.இந்த நாட்களில் நடைபெறுகிறதேரோத்சவம் பார்வைக்கு விருந்து. கபாலீஸ்வரர் ஒரு தேரில், தன் மனைவி கற்பகாம்பாளுடன்அமர்ந்திருக்க, பிரம்மா, அந்தத்தேரினை ஓட்டிச் செல்கிற இந்தக்காட்சி பக்தர்களை வெகுவாகக்கவரும். தேர் முழுக்க மலர்களால்அலங்கரிக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் ஒன்று கூடி, தேரினை இழுத்துச்செல்வார்கள்.
அடுத்து பிரம்மோத்சவம். இதில் கபாலீஸ்வரரையும் கற்பகாம்பாளையும்அழகிய உடை மற்றும் நகைகளால்அலங்கரித்து, வாகனத்தில் அமரச்செய்து, கோயிலையும், அதையொட்டியகுளத்தையும் சுற்றி வலம் (பிரதட்சணம்)வரச்செய்வார்கள். இது வெவ்வேறுவாகனங்களில், 9 நாட்களுக்குத்தொடரும்.
இந்த 10 நாட்களிலும், பஞ்சமூர்த்திகளும்,ஆலயம் அமைந்துள்ள நான்குமாட வீதிகளிலும் மேளதாளங்கள்முழங்க, ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுவார்கள். பஞ்சமூர்த்திகள்என்றால் பிரதானமாக பிள்ளையாரும்,அவரைத் தொடர்ந்து கபாலீஸ்வரரும்,கற்பகாம்பாளும், சுப்ரமணியரும்,கடைசியாக சண்டிகேஸ்வரரும்…
3ம் நாள் அதிகார நந்தி பிரதட்சணமும், 5வது நாள் ரிஷப வாகனபிரதட்சணமும், 7ம் நாள்தேரும்,8ம் நாள் அறுபத்து மூவரும் மிகமுக்கியமானவை. அடுத்ததாக 63நாயன்மார்களும் கபாலீஸ்வரர் சிலையைத் தொடர்ந்து ஊர்வலமாக வலம்வரச்செய்யப்படுவார்கள்.
சிவ பக்தர்களான 63 நாயன்மார்களையும் கொண்டாடும்வகையில், அரங்கேறும் விழா இது. நாயன்மார்களை நகைகளாலும்,பூக்களாலும் அலங்கரித்து பல்லக்கில்வைத்து, சிவனையும், பார்வதியையும்நோக்கியபடி, ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். அப்பர்,சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர்ஆகிய மூவரும் தனிப்பல்லக்கில்கொண்டு செல்லப்படுவார்கள்.விநாயகர் முதலிலும், அவரைத்தொடர்ந்து கோலவிழி அம்மனும்கொண்டு செல்லப்படுவார்கள். வைரசாமிக்கும், திருவள்ளுவருக்கும் கூட இந்தத் திருவிழாவில் இடமுண்டு.அறுபத்து மூவர் திரு விழாவைக் காண்பதற்கென்றே, ஊர் விட்டு ஊர்வரும் பக்தர்களை வருடந்தோறும் பார்க்கலாம்.
கோயில் பூக்கள்
• சென்னை மயிலாப்பூரிலுள்ள இத்திருக்கோயில் மயிலாப்பூர் அல்லது பேருந்து நிறுத்தங்களிலிருந்து நடைத்தொலைவில் உள்ளது. மயிலாப்பூர் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையமும் மிக அரு கிலேயே உள்ளது.
• இதன் அருகிலேயே ராமகிருஷ்ணா மடம், சாய்பாபா கோயில், வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் (ஸ்ரீ ஸ்ரீநிவாசர் கோயில்), கேசவப்பெருமாள், கோயில், மாதவப்பெருமாள், கோயில், முண்டக்கண்ணி, கோயில், கோலவிழியம்மன் கோயில், வாலீஸ்வரர் கோயில், காரணீஸ்வரர் கோயில், வீரபத்திரசாமி கோயில், அப்பர்சாமி கோயில், நவசக்தி விநாயகர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.