fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

மன்னாரில் கொடூர விபத்து: சம்பவ இடத்திலேயே இரு சகோதரிகள் உயிரிழப்பு! (Photos)

மன்னார் – பரப்பான்கண்டல் பகுதியில் இன்று வியாழக்கிழமை(09) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.

இன்று(09)பகல் குறித்த விபத்து நடந்துள்ளது.

அரச அலுவலர்களான சகோதரிகள் இருவரும் தமது கடமைகளை முடித்துக் கொண்டு மன்னாரிலிருந்து கட்டையடம்பன் பகுதியிலுள்ள தமது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த போது முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கிப் பயணித்த பிக்கப் வாகனம் மோதியதில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த சகோதரிகளான இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சந்தியோகு லிண்டா (வயது-40) மற்றும் மன்னார் அஞ்சல் அலுவலர் சந்தியோகு டெரன்சி (25) ஆகியோரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர்.

இதேவேளை, விபத்துக்கு காரணமான பிக்கப் சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிலங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

நூறு ஒலிப்பதிவுகள் வெளியானாலும் நான் அஞ்சமாட்டேன்!- நாடாளுமன்றில் ஹிருணிகா காட்டம்

World News

ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே 1,000 ரூபா பெற முடியும்

World News

யாழ். பல்கலையினுள் அத்துமீறிய அதிரடிப் படையினர் மாணவர்களுக்கு அச்சுறுத்தல்

World News