fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

திருமணமாகி சில நாட்களிலே மனமுடைந்த சவுந்தர்யா

சவுந்தர்யா நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் என்பது அனைவரும் அறிந்தது,
இவர் ரஜினியின் மகள் என்பதை தாண்டி இயக்குனாரகவும், தயாரிப்பாளராகவும், கிராஃபிக் டிசைனராகவும் உள்ளார். தன் தந்தையை வைத்து மிகப்பெரிய பொருள் செலவில் கோச்சடையான் என்ற படத்தை இயக்கினார்.

மேலும் இவர் படையப்பா, பாபா, சந்திரமுகி, அன்பே ஆருயிரே, சிவகாசி, மஜா, சண்டைக்கோழி, சென்னை 600028, கோவா, சிவாஜி, கோச்சடையான் போன்ற படங்களில் கிராஃபிக் டிசைனராக பணியாற்றியுள்ளார். மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற வேலையில்லாப் பட்டதாரி பாகம் 2 யின் இயக்குனர் இவரே. அடுத்ததாக வரப்போகும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறிவிட்டார்.

இவ்வாறு புகழின் உச்சியில் இருக்கும் இவர் 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வினை திருமணம் செய்தார், அத்திருமணம் மிக விமர்சையாக நடந்தது, பின் 2015 ஆம் ஆண்டு இவர்களுக்கு வேத் என்ற மகன் பிறந்தார், இந்நிலையில் சமீபத்தில் சவுந்தர்யா அஸ்வினை விவாகரத்து செய்தார்.

தற்போது இவர் தொழிலதிபர் வணங்காமுடியை திருமணம் செய்துள்ளார். இதனால் இவரைப்பற்றி தவறான அவதூறுகள் வந்து கொண்டு உள்ளன. இதுகுறித்து ஊடகங்களில் பலவிதமான கருத்துக்கள் பரவுகின்றன. சொந்த வாழ்க்கை பற்றி ஊடகங்களில் பேசப்படும் கருத்துக்களால் மனமுடைந்துள்ளார் சவுந்தர்யா.

Related posts

”மாஸ்டர் ரிலீஸ்” விஜய் அதிரடி கருத்து, பிரபல பத்திரிக்கை வெளியிட்ட தகவல் !

TamilTwin India

அசுரன் படத்தில் இணைந்த அம்மு அபிராமி

N N

திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவச மருந்துகள் வழங்கும் சிரஞ்சீவி மருமகள்

TamilTwin India