fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

மதுரை லோக்கல் சேனலில் ஒளிபரப்பான தர்பார்! கடுப்பான லைகா நிறுவனத்தினர்

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

9ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தர்பார் படத்தை மதுரை அருகே இயங்கும், சரண்யா கேபிள் டிவி நெட்வொர்க் நிறுவனம் சட்டவிரோதமாக ஒளிபரப்பியுள்ளது.

இதனையடுத்து, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள லைகா நிறுவனம், இந்த செயலால் மதுரை விநியோகஸ்தர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Related posts

இயக்குனர் அவதாரம் எடுத்த ரம்யா!

TamilTwin India

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஷாலின் ‘சக்ரா’ வெளியான புகைப்படங்கள் !

TamilTwin India

தீபாவளிக்கு வெளியாகும் விஜய்யின் 6-வது படம் பிகில்

N N