fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

மக்களின் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வு: ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடித் தீர்மானம்!!

மக்கள் மத்தியில் சென்று அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக அடையாளம் கண்டு துரித தீர்வினை வழங்குவதற்காக கிராமங்கள் தோறும் விஜயம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை நேரடியாகக் கண்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிய ஜனாதிபதி எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறைகளைக் கேட்டறியும் ஜனாதிபதியின் முதலாவது விஜயத்திற்காகப் பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் சந்திப்பு ஹப்புத்தலை நூறு ஏக்கர் கிராமத்திலுள்ள குமாரதென்ன வித்தியாலயத்தில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (25) காலை- 10 மணிக்கு ஆரம்பமாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து சரியான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு ஜனாதிபதி நிவாரணங்களை வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் நாளை முதல் பகலில் ஊரடங்கு தளர்வு

World News

கொரோனா பரவலை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது!!

SL News

இதுவரை வெளியான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இதோ

World News