fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ”சில்லுக் கருப்பட்டி” திரைப்படம்
சினிமா

மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ”சில்லுக் கருப்பட்டி” திரைப்படம்

நான்கு கதைகளின் தொகுப்பு. யதார்த்தமாக ஒரு பயணம். படத்தின் ஸ்பெஷல் என்றால் அதன் மேக்கிங் இசை மற்றும் வசனங்கள். டீன் ஏஜ் ஈர்ப்பு, இன்றையை ஐ டி ஜெனெரேஷனின் பரந்த மனப்பான்மை, நடுத்தர வர்க்கத்தின் இயந்திரமயமான குடும்ப வாழக்கை, முதுமை காலத்திலும் அன்பிற்காக ஏக்கம். என ஒரு யுகத்தையே நம் கண் முன்னே கொண்டு வந்துவிடுகிறார் இயக்குனர் ஹலீதா ஷமீம்.

நடிகர் நடிகையர் தேர்வு, லொகேஷன் என இந்த டீம்மின் மெனக்கடல் நல்ல பலனையே தந்துள்ளது. சோகம், தனிமை, ஏக்கம், அன்பு என கதாபாத்திரங்கள் வாயிலாக நம்மையும் திரையினுள் இழுத்து சென்றதே இப்படத்தின் வெற்றி. குடும்பத்துடன் சென்று பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே அனைவரும் பார்க்கவேண்டிய படமே அல்லது கற்க வேண்டிய பாடமே இப்படம் என்றால் அது மிகையாகாது.

Related posts

நடிகராக அவதாரம் எடுத்த சூரி!

N N

விஜய் ரசிகர்களிடம் சிக்கிய திரௌபதி இயக்குனர், கிண்டலடித்தவருக்கு கொடுத்த பதிலடி.!

TamilTwin India

‘வேட்டையாடு விளையாடு2’ மீண்டும் கவுதம் மேனனுடன் இணைகிறாரா கமல்ஹாசன் !

TamilTwin India