fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

பொலிஸ் தடுப்புக் காவலிலிருந்த இளைஞன் தற்கொலைக்கு முயற்சி!: யாழில் அதிர்ச்சி சம்பவம்

வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ். மானிப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுப் பொலிஸாரின் தடுப்புக் இளைஞனொருவன் தனது கழுத்தில் பலதடவைகள் பிளேட்டால் கீறித் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மானிப்பாய்ப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி உள்நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் நேற்றைய தினம் (29) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைதான மூவரும் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.

அவர்களில் சந்தேகநபரான இளைஞனொருவன் நேற்றிரவு தனது சட்டைப் பைக்குள்ளிருந்து பிளேட்டை எடுத்துத் தனது கழுத்தில் பல தடவைகள் கீறித் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்துக் குறித்த இளைஞனை மானிப்பாய் பொலிஸார் உடனடியாக மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு சத்திரசிகிச்சை கூடத்தில் விசேட சிகிச்சைகள் வழங்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டுள்ளார்.

Related posts

பெண் போராளிகளின் படங்களைத் தாங்கிய நிகழ்வு- ஸ்ரீதரன், வேழமாலிகிதன் வாக்குமூலம் வழங்கினர்

World News

பாடசாலைகளை மே மாதம் ஆரம்பிப்பதில் தாமதம்!

World News

பூதகண வாகனத்தில் எழுந்தருளிய நல்லைக் கந்தன் (Photos)

TamilTwin