fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

பைபிளில் கூறப்பட்டுள்ளதா?: சைவபரிபாலன சபை கேள்வி!

வேறு மதத்தவரைத் தூற்றவும், மதச் சின்னங்களை அழிக்கவும் பைபிளில் கூறப்பட்டுளளதா எனக் கேள்வியெழுப்பியுள்ள சைவபரிபாலன சபை வேதாகமத்தைப் பின்பற்றுகின்ற கத்தோலிக்க மக்கள் திருக்கேதீஸ்வர கோயில் வீதி அலங்கார வளைவை உடைத்தமை கவலையளிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் சைவபரிபாலன சபை செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிவராத்திரிக்கு முன்னதாக திருக்கேதீஸ்வர கோவில் வீதி அலங்கார வளைவைக் கத்தோலிக்க பாதிரியார் தலைமையிலான அடாவடிக் குழு உடைத்தமையைக் கண்டு பதை பதைத்துப் போனோம். மானிடப் பிறவியெடுத்த மனிதர்களா இவ்வாறு செய்தார்கள்? இந்தச் சம்பவத்தை சைவபரிபாலன சபை வன்மையாகக் கண்டிக்கின்றது.

குற்றஞ் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மீள இடம்பெறாது பார்த்துக் கொள்ள வேண்டியது பங்குத் தந்தையினதும், பங்கு மக்களினதும் கட்டாய கடமை என குறித்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மகுடத்தை சூடப் போவது யார்?: யாழில் இன்று இறுதிப் பலப் பரீட்சை! (Photos)

TamilTwin

பஸ்-வான் மோதி விபத்து: 27 பேர் காயம், ஐவர் கவலைக்கிடம்

TamilTwin

கிளிநொச்சியில் நாளை எழுச்சிபூர்வமாக நடைபெறவுள்ள இந்துமாநாடு (Photos)

TamilTwin