fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பூஜா ஜவேரி அதர்வா, பரத்துக்கு ஜோடியாகிறார்

பூஜா ஜவேரி அதர்வா, பரத்துக்கு ஜோடியாகிறார்

தொடரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் பூஜா ஜவேரி.  இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். தொடரி படத்தில் சிறிய வேடத்தில் மட்டுமே இவர் நடித்தார்.  தற்போது இவர் அதர்வா மற்றும் பரத்துடன் நடித்து வருகிறார்.  துவாரகா என்ற திரைப்படத்தில் இவர் விஜய் தேவகொண்டாவிற்கு ஜோடியாக நடித்து உள்ளார்.  இத்திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பினைப் பெற்றது.  இதை தொடர்ந்து இத்திரைப்படம் தமிழில் அர்ஜூன் ரெட்டி என்ற பெயரில் வெளியாக உள்ளது.  கீதா கோவிந்தம் படத்தின் மூலம் விஜய் தேவகொண்டாவிற்கு தமிழிலும் ரசிகர்கள் உள்ள நிலையில் இப்படம் இங்கு நல்ல வரவேற்பினை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மார்ச் மாதம் 15 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

     இத்திரைப்படத்திற்கு தமிழில் ஆண்டனி ரிச்சர்டு வசனம் எழுதி இருக்கிறார்.  நெல்லை பாரதி பாடல்களை எழுதி உள்ளார்.  இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்து நேரடி தமிழ் பட பாடல்களுக்கு இணையாக உருவாகி உள்ளாதாக பாராட்டுகள் வருகின்றன.

Related posts

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அஸ்தி கங்கையில் கரைப்பு…!

TamilTwin India

நான் 14 வயதில் இப்படி தான் இருந்தேன், நடிகை சுனைனா..!

TamilTwin India

ஆண்ட்டி என்றால் அத்தைதானே! நடிகர் ஜீவாவிடம் ரசிகர் கேட்ட சந்தேகம்

TamilTwin India