fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

புதியதொரு தலைமையைத் தமிழ்மக்கள் உருவாக்க வேண்டும்: கஜேந்திரகுமார் அறைகூவல்!! (Video)

தமிழ்மக்கள் தங்கள் உண்மையான உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கக் கூடியதொரு தலைமை இல்லாத சூழலில் நேர்மையான புதியதொரு தலைமையையே தமிழ்மக்கள் உருவாக்க வேண்டுமெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறைகூவல் விடுத்துள்ளார். 

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவியும், நல்லூர் பிரதேச சபை உறுப்பினருமான திருமதி- வாசுகி சுதாகரனின் சொந்த நிதிப் பங்களிப்பில் 50 குடும்பங்களுக்குத் தைப்பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ். திருநெல்வேலியிலுள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை(11) பிற்பகல் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளால் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்து அனுப்பியவர்களைத் தமிழர்களின் தலைமைத்துவமாக அடையாளப்படுத்தக் கூடியதொரு நிலை இன்றில்லை. இதுதான் இன்றைய யதார்த்தம்.    

தற்போது தமிழ்த்தலைமையென்று சொல்லிக் கொள்ளும் மிகப் பிழையான தரப்புக்கு மாற்றுத் தேடும் போது அந்தத் தரப்பின் செயற்பாடுகளும் பிழையான தரப்பின் செயற்பாடுகள் போன்றே அமைந்துள்ளது. எனவே, நாங்கள் சரியான சொற்களைத் தேடுவதன் மூலம் சரியான அரசியலையும் இனம் கண்டு கொள்ள வேண்டும்.

பலரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றுத் தலைமை எனக் கூற விளைகிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட தரப்புக்கு மாற்றாக உருவாக நாங்கள் ஒருபோதும் தயாரில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்}

Related posts

சாதாரணப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவுறுத்தல்!

TamilTwin

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது முதலாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு (Video, Photos)

TamilTwin

93 வயது தந்தியின் நீச்சல் கனவை நிறைவேற்றிய மகள்!

World News