fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » பிரான்ஸில் கடலில் மூழ்கி யாழ்.தெல்லிப்பழை மாணவி உயிரிழப்பு! (Photos)
இலங்கைச் செய்திகள் செய்திகள் பிரான்ஸ் புலம்

பிரான்ஸில் கடலில் மூழ்கி யாழ்.தெல்லிப்பழை மாணவி உயிரிழப்பு! (Photos)

பிரான்ஸில் ஈழத்தைப் பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவியொருவர் கடலில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை(03) இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் யாழ். தெல்லிப்பழைப் பகுதியைப் பூர்வீகமாக கொண்ட மாணவியொருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பிரான்ஸில் பல்கலைக்கழகத்துக்குப் புகுமுக மாணவியாகத் தெரிவு செய்யப்பட்ட குறித்த மாணவி ஐந்து சக மாணவிகளுடன் கடலில் நீராடச் சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவி திடீரெனக் கடலின் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். எனினும், ஏனைய மாணவிகள் ஆபத்து எதுவுமின்றித் தப்பியுள்ளனர்.

யாழ். தெல்லிப்பழைப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவரும், பிரான்ஸை வசிப்பிடமாக கொண்டவருமான அனித்திரா இரஞ்சன் (வயது- 19 ) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இதேவேளை, மேற்படி மாணவியின் உயிரிழப்பு பலரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

{செய்தித் தொகுப்பு:-செ. ரவிசாந் }

Related posts

மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடி வந்தவர் கைது

SL News

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரிப்பு

World News

தியாகி திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு: சிவாஜிலிங்கம் கைது!

TamilTwin