fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

பிரசித்தி பெற்ற யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பங்குனித் திங்கள் உற்சவம் இன்று ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பங்குனித் திங்கள் உற்சவம் இன்று திங்கட்கிழமை(18) ஆரம்பமாகவுள்ளது. இம்முறை நான்கு பங்குனித் திங்கள் உற்சவங்களும் இவ்வாலயத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளன.

Pantri thalaichi amman

இரண்டாம் பங்குனித் திங்கள் உற்சவம் எதிர்வரும்- 25 ஆம் திகதியும், மூன்றாம் பங்குனித் திங்கள் உற்சவம் அடுத்தமாதம்-01 ஆம் திகதியும், நான்காம் பங்குனித் திங்கள் உற்சவம் அடுத்த மாதம்-08 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

இவ்வாலய பங்குனித் திங்கள் உற்சவ காலங்களில் அடியவர்கள் அதிகாலை-05.30 மணி முதல் பொங்கல் செய்து வழிபாடாற்ற முடியுமெனத் .தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று இவ்வருடமும் இவ்வாலய பங்குனித் திங்கள் உற்சவ காலங்களில் இலட்சக்கணக்கான அடியவர்கள் அணிதிரள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, அம்மனுக்கு உகந்த பங்குனித் திங்கள் உற்சவம் யாழ்.குடாநாட்டிலுள்ள ஏனைய அம்மன் ஆலயங்களிலும் சிறப்பாக இடம்பெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!

World News

முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் தாராபுரம்!! (Photos)

TamilTwin

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் நாளையும் மின்தடை

TamilTwin