fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

பிணையில் விடுதலையானார் சிவாஜிலிங்கம்!

 

நீதிமன்றத் தடை உத்தரவை மீறி கோண்டாவிலில் தியாகதீபம் திலீபனின் 33 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டித்த மூத்த அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் கடும் எச்சரிக்கையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் இன்று(16) பிற்பகல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டிச் சாரதியும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தியாகதீபம் திலீபனின் 33 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று(15) ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய்ப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாகப் பொலிஸார் தடை உத்தரவினைப் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நேற்றுப் புதன்கிழமை(16) கோண்டாவில் பகுதியில் அனுஷ்டித்தார். இதனால், கோப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். கைதுசெய்யப்பட்ட சிவாஜிலிங்கமும், அவர் வாடகைக்கு அமர்த்தி வந்த முச்சக்கர வண்டிச் சாரதியும் நேற்று முழுவதும் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ. பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா, விஸ்வலிங்கம் திருக்குமரன் உள்ளிட்ட எட்டு சந்தேகநபர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

பொலிஸார் மற்றும் சிவாஜிலிங்கம் தரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் சிவாஜிலிங்கத்தை கடுமையாக எச்சரித்ததுடன் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டார். அத்துடன் முச்சக்கரவண்டிச் சாரதியும் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை, எதிர்வரும்- 25 ஆம் திகதி திகதி இருவரையும் மன்றில் மீண்டும் மன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டது.

{செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி}

Related posts

அனைத்து மாவட்டங்களுக்கு இடையிலும் பஸ், ரயில் போக்குவரத்து சேவைகள் இன்று ஆரம்பம்

World News

ஒரேநாளில் கோடீஸ்வரரான யாழ். வாசி (Video, Photos)

TamilTwin

மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது- ரஜினிக்கு சீமான் பதிலடி

World News