150க்கும் அதிகமானவர்கள் புதிய லைட்நிங் (Lightning Network) ஐ பாவித்து பிட்காயின் மூலம் டோமினோஸ் பீட்சாவை ஒவ்வொரு கிழமையும் கொள்வனவு செய்து வருவது என்பது பிட்காயின் பாவனை மக்களிடத்தே பிரபல்யம் அடைந்து வருகின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
கிரிப்டோ கரன்சியை உபயோகித்து பணக்கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள புதிதாக உருவாகிய நிறுவனம்தான் “பொல்ட்” (Fold). தமது வலயத்தில் நீங்கள் கிரிப்டோ கரன்சி மூலம் அவர்களது லைட்னிங் வலயத்தளத்தில் பிட்சா உட்பட பல உணவு மற்றும் அனைத்து பொருட்களையும் வாங்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளாகள்.
மேலும் “பொல்ட்” ஆப் (Fold APP) தமது லைட்நிங் ஆப்பில் மேலும் பல உணவுமுகவர்கள் உட்பட “ஊபர்” (Uber) நிறுவத்தோடும் உடன்படிக்கையை மேற்கொண்டு பிட்காயின் மூலம் பண பரிமாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்துள்ளார்கள்.

பிட்கொயின் மற்றும் கிரிப்டோகரன்சி பாவனையை டொமினோஸ் பீட்சா வரவேற்றுள்ளதோடு, மிகவும் சாதகமானதொரு நிலையை வெளிப்படுத்தியுள்ளமை பிட்கொயின் மற்றும் கிரிப்டோகரன்சி தொழிநுட்பத்திகு மிகவும் ஒரு சாதகமான எதிர்காலம் என்று கருதுகிறார்கள்.