fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பிக் பாஸ் ஹரிஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் – ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் ஹரிஸ், பிக் பாஸ் வெற்றிக்குப் பிறகு ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

‘பியார் பிரேமா காதல்’ படத்தைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’. இப்படத்தினை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி உள்ளார்.  இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்தி இருக்கிறார். 

பிக் பாஸ் ஹரிஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மா கா பா ஆனந்த், பால சரவணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ வருகிற மார்ச் 15-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இப்படத்தினை மாதவ் மீடியா தயாரித்து உள்ளது.  இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைத்து இருக்கிறார்.  கவின்ராஜ் ஒளிப்பதிவும், பவன் ஸ்ரீகுமார் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.

Related posts

பிகில் படத்தின் 3 வது பாடல் வெளியீடு

N N

நயன்தாராவை ஒப்பந்தம் செய்யச் சொன்ன சூப்பர் ஸ்டார்!!

N N

போலீசாக அவதாரமெடுக்கும் அட்டு பட நாயகன்

TamilTwin India