fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும்

வரப் போகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவது உறுதி என பா.ஜனதா தமிழக  தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூறி உள்ளார்.  அ.தி.மு.க உடன் கூட்டணி சேர்ந்து உள்ள நிலையில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மேல் சபை தொகுதியும், பா.ஜனதாவுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும்

   அ.தி.மு.க உடன் மேலும் சில கட்சிகள் கூட்டணி வைக்க இருக்கின்றனர் என கூறி வருகின்றனர்.  தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகள் கூட்டணியில் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  இன்னும் எத்தனை கட்சிகள் இணைய இருக்கின்றன என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

     தூத்துக்குடியில் பா.ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் போட்டியிடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.  இது குறித்து அவர் கூறியதாவது, எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன, ஆனால் எங்கு போட்டியிடலாம் என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை அதை குறித்து ஆலோசித்து வருகிறோம்.  அது முடிவு செய்யப்பட்ட பிறகு அத்தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று கூறி உள்ளார்.

Related posts

கவர்ச்சியில் கலக்கும் அடா சர்மா வைரலாகும் ட்விட்டர் பதிவு !

TamilTwin India

ஈரமான ரோஜாவே சீரியலுக்கு வந்த சோதனை! நீதிமன்றம் செல்லும் இயக்குனர்!

TamilTwin India

பாஜகாவில் இணைவாரா நயன்தாரா

TamilTwin India