Tuesday, December 7, 2021
HomeUncategorisedகுழந்தையின் எதிர்காலம் பாழாகிறது - தாடி பாலாஜி

குழந்தையின் எதிர்காலம் பாழாகிறது – தாடி பாலாஜி

மனைவியின் நடவடிக்கைகளால் குழந்தையின் எதிர்காலம் பாழாகிறது என நடிகர் தாடி பாலாஜி குற்றம் சாட்டி உள்ளார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் இணைந்த தாடி பாலாஜியும் அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  இந்நிலையில் தாடி பாலாஜி சென்னையில் பத்திரிக்கை நிறுவர்களுக்கு பேட்டி அளித்து உள்ளார்.  அதில் அவர் கூறியதாவது, என்னுடைய மனைவி நித்யா போலிஸ் ஒருவருடன் சேர்ந்து கொண்டு என்னுடைய குழந்தையுடைய எதிர்காலத்தினை சீர் அழிக்கிறார் என தெரிவித்து உள்ளார்.  மேலும் அவர், என்னுடைய மன உளைச்சலுக்கு அந்த போலிஸ்காரர் தான் காரணம் என்றும் அவர் மீது ஏற்கனவே தான் புகார் அளித்து இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.  புகார் அளித்ததற்கு பழிவாங்குவதற்காகவே அவர் இவ்வாறு நடந்து வருவதாக அவர் தெரிவித்து உள்ளார்.

     என்னுடைய குழந்தைக்கு எது தேவையோ அதை ஒரு தந்தையாக செய்ய கடமைப்பட்டு உள்ளேன் என்றும் அதை செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் அவர் கூறி உள்ளார்.  குழந்தை போர்ட்டிங் பள்ளியில் படிக்கும் பட்சத்தில் குழந்தையின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக கூறி உள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments