fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பாரா விக்னேஸ்வரன்?

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக மாகாண சபை முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்ந்த வழக்கு நேற்று(15) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

தொடுக்கப்பட்ட வழக்கை மீளப்பெறுவதாக டெனிஸ்வரன் அறிவித்த போதும் தம்மைச் சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக பதவிவிலக்கியமை தொடர்பாக விக்னேஸ்வரன் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று நிபந்தனைகள் டெனிஸ்வரனால் முன்வைக்கப்பட்டது.

எனினும் டெனிஸ் – விக்கி தரப்பிற்கிடையே சமரசம் ஏற்படதாததால் வழக்கு திரும்பப் பெறப்படவில்லை. இதனால் இவ் வழக்கு நேற்று மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கிற்கான விசாரணை இன்றும், நாளையும் இடம்பெற்றுத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, நீதிமன்றத் தீர்ப்பிற்கமைய விக்னேஸ்வரன் குற்றவாளியாக இனம் காணப்பட்டால் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்கு உள்ளாக வேண்டி வரும் என்பதுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இராணுவ மயமாக்கல் ஏற்பட்டால் ஒடுக்கப்பட்டுள்ள இனவாதம் மீண்டும் உயிர்த்தெழும்- இந்திய புலனாய்வு அதிகாரி

World News

கோரோனோ பாதித்த பெண்ணுக்கு தொற்று இல்லாமல் பிறந்த குழந்தை

World News

வீசா இல்லாமல் இலங்கையில் சட்டவிரதமாக வசித்து வந்த கனடா பிரஜைகள் கைது

World News