fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

பாதுகாப்பு வழங்குமாறு கோரி ஆறு பிள்ளைகளுடன் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த குடும்பப் பெண்: யாழில் சம்பவம்

கணவரிடமிருந்து தமக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி 37 வயது குடும்பப் பெண் தனது ஆறு பிள்ளைகளுடன் யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

யாழ்.தென்மராட்சி கிழக்கில் வதியும் மேற்படி குடும்பப் பெண்ணின் கணவன் தினமும் மது அருந்தி விட்டு வந்து தினமும் தனது மனைவி மற்றும் பிள்ளைகளையும் துன்புறுத்தி வந்துள்ளார். கணவரின் துன்புறுத்தலைப் பொறுக்க முடியாத குடும்பப் பெண் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்து தமக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.

இவர்களில் நான்கு பெண் பிள்ளைகளும் அடங்குகின்றனர். இந்நிலையில் ஆறு பிள்ளைகள் மற்றும் தாயாரான குடும்பப் பெண் ஆகியோரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கொடிகாமம் பொலிஸார் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

யாழ். தாவடியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இல்லை!

TamilTwin

இராணுவத்தினருடன் சேர்ந்து விடுதலைப் புலிகளின் புதையல் தோண்டிய நபர்களுக்கு ஏற்பட்ட கதி!

World News

தேர்த் திருவிழா நாளில் நந்திக் கொடியுடன் அருட் காட்சி கொடுத்த ஏழாலை அத்தியடி முருகன் (Video, Photos)

TamilTwin