fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

காதலில் நெருக்கம் காட்டும் பாகுபலி ஜோடி

அனுஷ்காவும் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாசும் பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்தனர். பாகுபலி படத்தில் நடிக்கும் பொழுதே இவரும் காதலித்தனர் என்று கூறி வந்தனர்.  இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்றும் தகவல்கள் பரவிய வண்ணம் இருந்தது.  பிரபாஸ் இப்பொழுது சாஹோ என்ற பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

காதலில் நெருக்கம் காட்டும் பாகுபலி ஜோடி

அனுஷ்காவும் அதிகரித்த தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக வெளிநாடு சென்று உள்ளார்.  இருவரும் தங்களுடைய காதல் கிசு கிசுகளை உறுதிப்படுத்தாமலே இருந்த நிலையில் சமீபத்தில் இருவரும் ராஜமவுலி வீட்டு திருமண விழாவில் ஜோடியாக கலந்து கொண்டனர். 

அனுஷ்காவும் தன்னுடைய உடல் எடையை குறைத்து வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தார்.  அவருடைய மெலிந்த தோற்றத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

     இதைப் பற்றி பிரபாசிடம் கேட்ட பொழுது ஒரு நடிகரும் நடிகையும் இரண்டு மூன்று படங்களில் ஒன்றாக நடித்தால் அவர்களுக்குள் காதல் இருப்பதாகத் தான் பேசப்படும்.  ஆனால் நாங்கள் நட்புடன் தான் பழகுகிறோம் என்று பிரபாஸ் கூறி இருந்தார். இந்நிலையில், அவர்களுக்குள் காதலில் விரிசல் ஏற்ப்பட்டதாக பேசப்பட்டது.  இப்பொழுது இருவரும் இணைந்து ஜப்பான் செல்கின்றனர். இது அவர்கள் நடித்துள்ள படத்தினை விளம்பரத்திற்காகத் தான் என்றாலும், மீண்டும் இருவரும் காதலில் நெருக்கம் காட்டுவதாக படவுலகில் பேசப்பட்டு வருகிறது.

Related posts

வரம்பு மீறிய கவர்ச்சி கிரணின் வைரல் புகைப்படம்

TamilTwin India

இசைஞானியாக தனுஷ்! இயக்குனராக யுவன் சங்கர் ராஜா! என்னடா நடக்குது இங்க குழப்பத்தில் ரசிகர்கள்

TamilTwin India

தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண்

N N