fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் ஜனநாயகத்தின் எதிர்காலமும்: யாழில் விசேட கலந்துரையாடல்

சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் இலங்கையில் ஜனநாயகத்தின் எதிர்காலமும் எனும் தலைப்பிலான விசேட கலந்துரையாடல் பெளர்ணமி தினமான எதிர்வரும் புதன்கிழமை (20) பிற்பகல்-03.30 மணி முதல் இல- 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி எனும் முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளர் தோழர் என். பிரதீபன் தலைமையில் இடம்பெறவுள்ள இக் கலந்துரையாடலில் முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சேனாதீர குணத்திலக பிரதான உரையினை ஆற்றவுள்ளார்.

இன்றைய இலங்கை அரசாங்கத்தால் ஏற்கனவே நாற்பது ஆண்டுகளாக அமுலிலுள்ள மக்கள் மீது அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) மாற்றாக அமுல்படுத்தப்படவுள்ள மிகவும் கொடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ( CTA ) தொடர்பாக முழுமையாக ஆராயவுள்ள மேற்படி உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும்.

இதேவேளை, இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் அரசியல், பொருளாதார, சமூக, விஞ்ஞான, கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Special-Conference-in-Jaffna

Related posts

வலி. தெற்குப் பிரதேச சபை அமர்வில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம் (Video)

TamilTwin

மோட்டார் வாகனங்களுக்கான வரி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்கும் பணி வடக்கில் மீள ஆரம்பம்

World News

வவுனியாவில் வைத்தியர்களுக்கும் டெங்கு!!

TamilTwin