fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

பனிக்காலத்தில் உங்கள் வறண்ட சருமத்திற்கு சில எளிமையான பேஸ் பேக்ஸ்

face packs for dry skin

வின்டர் சீசன் என்றாலே குளுமை, பசுமைனு மனசு இதமா இருக்கும்.ஆனால் சருமம் வறண்டு போயிருக்கும். காரணம் குளிர், பனி போன்றவை! வறண்டு காய்ந்து போன தோலை எப்படியெல்லாம் தவிர்க்கலாம்?? இதை வீட்டிலேயே சரி செய்ய வாங்க கொஞ்சம் ஈசி பேஸ் பேக் டிப்ஸ் பாப்போம்.

பொதுவாக குளிர் காலத்தில் சருமம் வறண்டு இருக்கும்.இதனை போக்க எண்ணெய் சத்து அல்லது நீர் சத்து உள்ள பொருட்களை வைத்து வீட்ல செய்ற பேஸ் பேக் யோசனைகளை அளிக்கிறோம். பின்பற்றி பயன் அடையுங்கள்.

பாதாம் பேஸ் பேக் :

தேவையான பொருள் :

பாதாம் -1/4கி

விரலி மஞ்சள் – 1

பூலாங் கிழங்கு -1

இவை மூன்றையும் இரண்டு மூன்றாக இடித்து, நிழலில் 2 தினங்கள் காயவைக்க வேண்டும்.எறும்பு ஏறாமல் பார்த்து கொள்ளல் வேண்டும்.மிக்ஸியில் போட்டு நைஸ் பவுடர் போல பொடித்து கொள்ள வேண்டும். காலையில் தயிரில் இதனை கலந்து முகத்தில் பூசி கொள்ள வேண்டும். 15 நிமிடம் பின்னர் அலசினால் சருமம் ஜொலிக்கும்.முகத்தில் பூசிய முதல் 2 நிமிடம் நன்கு மசாஜ் செய்தால் ரத்தம் ஓட்டம் மேம்படுத்தப்பட்டு முகம் பொலிவு பெற முடியும்.

ஓட்ஸ் பேஸ் பேக் :

ஓட்ஸ் -2 ஸ்பூன்

தேன் – 1 ஸ்பூன்

பால் -1 ஸ்பூன்

ஓட்ஸ் நன்றாக பவுடர் செய்து, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, 1 ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கொழப்பவும். அதிகமான பால் சேர்த்தால் முகத்தில் பேக் நிக்காது.இதனை முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்தால், பனியால் ஏற்படும் வெள்ளை பத்துகள் போயிரும். அதோட தேவை இல்லாத டெட் செல்ஸ் போகி, ஆரோக்கியமான செல் வந்து முகம் நிறம் கூடும்.

தயிர் பேஸ் பேக் :

தேவையான பொருள் :

தயிர் -1 ஸ்பூன்

லெமன் ஜூஸ் -2 சொட்டு

தேன் -3 சொட்டு

மூன்றையும் நன்கு கலந்து, முகத்தில் பூசி, 10 நிமிடம் வைத்து இருந்தால் பனியால் ஏற்படும் கருமை போகும். கருவளையம் சீக்கிரத்தில் காணாமல் போகும். தயிர் மூலம் வைட்டமின் c முகத்திற்கு கிடைக்கும்.

காபி பேஸ் பேக் :

தேவையான பொருள் :

காபி பொடி -1 tsp

தேன் – 1tsp

ஆலிவ் எண்ணெய் – 1/2 ஸ்பூன்

இதனை நன்கு கலந்து முகத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்யணும். பின்னர் 20 நிமிடம் முகத்தில் வைக்கவும். காபி பொடியில் பாலிபனோல் மற்றும் ஹைட்ரொசின்னமிக் அமிலம் உள்ளதால் முகம் செல்களை அரோக்கியமாக வைப்பதோடு, முகம் புத்துணர்ச்சி பெரும்.

பனானா பேஸ் பேக் :

தேவையான பொருள் :

வாழைப்பழம் -பாதி

பால் -1ஸ்பூன்

அல்லது

ரோஸ் வாட்டர் -1ஸ்பூன்

வாழைப்பழத்தை பால் கலந்து நன்றாக மசிக்கவும்.இதனை முகத்தில் பூசுவதால் முகத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து முகம் மின்னும்.

கசகசா பேஸ் பேக் :

தேவையான பொருள் :

கசகசா -2ஸ்பூன்

பால் -1ஸ்பூன்

கசகசாவை நன்றாக சுடு  தண்ணீரில் ஊற வைக்கணும்.பால் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.இதனை முகத்தில் தினமும் இரவு பூசி 30 நிமிடம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவனும். இதனால் முக நிறம் கூடும்.தினமும் இதனை செய்தால் நிச்சயம் நிறம் கூடும்.

அலேயோ வேரா :

தேவையான பொருள் :

சோத்து காத்தலை

இதில் உள்ள ஜெல்லை எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து,   பின்னர் தண்ணீரை கையில் தொட்டு மசாஜ் செய்து வந்தால், சருமம் இறுகும்.தோல் சுருக்கம் குறைந்து இளமையான தோற்றம் கிடைக்கும்.

தேங்காய் பால் பேஸ் பேக் :

தேவையான பொருள் :

கெட்டியான தேங்காய் பால் -10ml

இதனை முகத்தில் தடவி காய வைத்தால், பனியினால் ஏற்படும் வறட்சி நீங்கி மேனி மின்னும்.

எந்த ஒரு பேசியல் செய்யும் முன்னர் முகத்தை கழுவ வேண்டும். அப்போது தான் முழுமையான பலன் கிடைக்கும்.

இதை பின்பற்றி இந்த பனி காலத்தில் மனசையும் முகத்தையும் குளுமையாக வைத்து கொள்ளுவோம்!

Related posts

முகம் பளிச்சென்று மாற ஆண்களுக்கான சில டிப்ஸ்

N N

பாலை வைத்து முகத்தினை பொலிவாக்கலாம்

N N

உடல் எடையைக் குறைக்க நாம் செய்யும் தவறுகள்

N N