fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

பச்சைக் காய்கறி உண்பது இவ்வளவு நல்லதா

பச்சைக் காய்கறி உண்பது இவ்வளவு நல்லதா

சில வகையான பச்சைக்காய்கறிகளை நாம் பச்சையாக உட்கொள்வதே மிகச் சிறந்தது. முக்கியமாக இவ்வகை காய்கறிகளை நாம் சமைத்து உண்ணுவதை விட பச்சையாக உண்பதே சத்துக்கள் முழுவதுமாக கிடைக்க வழிவகுக்கின்றன.

காய்கறிகளை நாம் பச்சையாக உண்பது ஆரோக்கியமாக வாழ துணை புரிகின்றன. முள்ளங்கியை நாம் சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இரத்தத்தில் சக்கரையின் அளவையும் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

கேரட்டில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. நமது கண்பார்வைக்கு மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றலையும் கேரட் அளிக்கிறது. முளைகட்டிய பயிரை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெற்று ஆரோக்கியமாக இருக்கும்.

இரத்ததின் அளவினை அதிகரிக பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த சோகை உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல மாற்றத்தினை காணலாம். பூண்டினை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைவதுடன் உடல் வலிமை பெறுகிறது.

Related posts

சத்தான வாழைப்பூ பருப்பு கூட்டு!!

N N

வித்தியாசமான சுவை கொண்ட உருளைக்கிழங்கு தேங்காய் பால் வறுவல்!!

N N

உருளைக்கிழங்கு தயிர் சீஸ் போண்டா!!

N N