மனிதனுக்கு மிக எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு இயற்கை மருந்துப் பொருள். இதனை பல்வேறு பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். இது மருந்துப் பொருள் மட்டும் இன்றி இது ஒரு உணவுப் பொருளும் கூட. தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதன் மூலம் நமது உடல் எவ்விதமான பிரச்சனையும் இன்றி ஆரோக்கியமாக இருக்கும்.

நெல்லிக்காய் உடலில் உள்ள கொழுப்புச் சத்துக்களை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள புரோட்டீன் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதை தினமும் பருகி வருவதால் நமது உடலில் உள்ள எலும்பு உறிஞ்சி செல்களின் அளவினைக் குறைக்கிறது. இதனால் நமது உடலில் உள்ள எலும்புகள் வலிமை பெறுகின்றன. உடல் சூடு தணிவதற்கும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வரலாம். நமது உடலினை குளிர்ச்சியாக வைத்து இருக்கக் கூடிய சக்தி நெல்லிக்காய்க்கு உண்டு. நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சரும அழகு தானாக அதிகரிக்கும். சரும அழகு அதிகரிப்பதற்கும் நெல்லிக்காய் உதவுகிறது.