fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

நீளமான வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்திய அஜித்

     நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம்.  இப்படத்தினைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், அஸ்வின் ராவ் ஆகியோர் நடிக்கின்றனர்.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.  இத்திரைப்படம் “பிங்க்” என்ற இந்திப் படத்தின் ரீமேக் ஆகும். 

நீளமான வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்திய அஜித்

சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்கள் கூடிவிடுவார்கள் என்று ஹைதராபாத்தில் இருக்கின்ற ராமாஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைத்து படமாக்கி வருகின்றனர்.  விஸ்வாசம் படமும் அங்குதான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  நீதிமன்றத்தில் நடப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.  இதில் நடிகர் அஜித் பெரிய வசனம் ஒன்றை ஒரே டேக்கில் பேசி அசத்தி உள்ளார்.  அவ்வளவு பெரிய வசனத்தினை ஒரே டேக்கில் அஜித் பேசியதைப் பார்த்து படக்குழுவினர் ஆச்சர்யம் அடைந்து அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி உள்ளனர்.

Related posts

பெற்ற தாயின் இறுதிச்சடங்கை கண்ணீருடன் வீடியோகாலில் பார்த்த பிரபல நடிகர்!

TamilTwin India

என் வாழ்வில் முக்கியமான படம் இது தான்! நடிகர் அசோக் செல்வன்

TamilTwin India

தன் காதலன் யார், நடிகை அனுஷ்கா சொன்ன ரகசியம் !

TamilTwin India